சென்னை, செப்.7- சென்னை மவுண்ட் -பூந்த மல்லி சாலையில் ஆக்கிரமிப் பில் இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கிண்டி பட்ரோடு - மவுண்ட் பூந்தமல்லி சாலையில் 437 என்ற சர்வே எண்ணில், 26,032 சதுர அடி கொண்ட அரசு நிலத்தை அடையாறு கஸ்தூ ரிபா நகரை தனிநபர் ஒருவர் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து ஆவணங் களை சரி பார்த்தபோது, அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும், அதை ஆக்கிரமித்து இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், இந்த இடத்தை சுற்றி இரும்பு கேட்டுடன் அமைக்கப்பட்ட மதில் சுவரை பல்லாவரம் தாசில்தார் சகுந் தலா தலைமையில் ஊழியர் கள் செவ்வாயன்று இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட நிலத் தின் மதிப்பு ரூ.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.