சென்னை,ஜூலை 15-
நந்திவரம்-கூடுவாஞ் சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு, பத்மாவதி நகரில் பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டி ருந்தது. அதில் சுற்று சுவர் மற்றும் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து இருந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் இளம்பரிதி தலைமையில் ஊழியர்கள் பூங்கா ஆக்கிரமிப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.