districts

img

அரசு ஊழியர்கள் ரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்

ராணிப்பேட்டை, மே. 18 –   ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் தின் சார்பில் சனிக்கிழ மைன்று (மே 18) ரத்ததான முகாம்  நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஜோசப் கென்னடி தலைமையில் நடைபெற்ற  இந்த முகா மில் சிறப்பு அழைப்பாள ராக மாவட்ட ஆட்சியர்  ச. வளர்மதி  பங்கேற்று முகாமை துவக்கிவைத்தார். பின்னர்  ரத்தக் கொடை யாளர்களை பாராட்டி சான்றி தழ்களை வழங்கி பேசிய  அவர், வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனை வேண்டுகோளை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பாக ரத்ததான முகாம் ஏற்பாடு  செய்தமைக்கு வாழ்த்துக் களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ரத்ததான முகாம் ஏற்பாடு செய்து ரத்ததானம் செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த ரத்ததான முகாமில் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவர் பி. பாஸ்கரன் தலைமையில் ரத்த வங்கி ஆலோசகர் நந்தகுமார் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு பணியாற்றினார்கள். இந்த ரத்ததான முகாமில் இருந்து 50 அலகு ரத்தம் வேலூர் ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர் க. லோகநாயகி, செயற்பொறியாளர் (ஊ.வ) வி. இராஜவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் வே. பர்சிலா வானசாஸ்திரி, மாநிலத் துணைத்தலைவர் எஸ்.காந்திமதிநாதன், மாவட்டச் செயலாளர் கு.புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் பொதுச்செய லாளர் ச. பாரி நிறைவு உரை யாற்றினார். இறுதியாக மாவட்டப் பொருளாளர் ரா. பூபதி நன்றி கூறி முடித்து வைத்தார். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட இணைச் செய லாளர்கள், மாநில செயற் குழு உறுப்பினர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;