districts

img

இஸ்ரேலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வரும் இனவெறி இஸ்ரேலை கண்டித்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், குடியாத்தம் அருகே சித்தூர் கேட் பகுதியில் நகர மற்றும் தாலுகா செயலாளர்கள் பி.காத்தவராயன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துப்பேட்டையில் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், சிதம்பரத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ராமேஷ்பாபு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. டில்லிபாபு, எஸ்.டி. சங்கரி, மாவட்டச் செயலாளர்கள் எஸ்.தயாநிதி, ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டார மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;