புதுச்சேரி, ஜூலை 6-
மாநிலத்தின் நிதி சிக்கலை தீர்க்க முன்வர வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) புதுச்சேரி வருகை தர உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தல் புதுவைக்கு வந்து அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரம் செய்தார். அத்துடன், இப்போதுதான் இந்த பக்கம் திரும்பி பார்க்கிறார்.
உள்ளதும் பறிபோனது!
ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பாஜக கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்தபோதிலும் புதுச்சேரிக்கு கூடுதலாக நிதி உதவி கிடைக்கவி ல்லை. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் எஞ்சியிருந்த மாநில வருவாய் பறி போனது தான் மிச்சம்.
கடந்த 2022-23ல் ஆண்டில் மட்டும் ரூ. 2370 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி நிதி வசூல் ஆகி உள்ள நிலையில், அத்தொகையில் 41 விழுக்காடு வழங்குவதற்கு மாறாக, 23 விழுக்காடு மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படி பல திட்டங்களில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையை 2022 ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டு விட்டது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதால் 10 விழுக்காடு நிதி இழப்பீடு பெற்று வந்த புதுச்சேரி உள்ளிட்ட சிறிய மாநிலங்களும், மேலும் நெருக் கடியை சந்திக்கக்கூடும் என எச்சரிக் கப்பட்டுள்ளது. இந்த நிதி நெருக் கடியால் மேலும் நிதி அபாயத்தில் புதுச்சேரி மாநிலம் தள்ளப்பட் டுள்ளது.
ஏமாற்று விளம்பரம்
மாநிலத்தில் பாஜக- என்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தந்தனர். புதுச்சேரி மாநிலம் மின்னல் வேகத்தில் முன்னேரும் என்று பல்வேறு அறிவிப்புகளை மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்தனர். ஆனால், புதிதாக ஒரு திட்டத்தையும் மக்களுக்கு கொண்டு வரவில்லை. புதுச்சேரி அரசின் நிதி நெருக்கடியும் தீர்ந்தபாடு இல்லை.
இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரு கையை ஒட்டி ஆரவார அறிவிப்பு களாக ஏராளமான திட்டங்களை தொடங்கி வைக்க போவதாகவும், மாநிலத்தின் நிதி சிக்கல்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் வெற்று விளம்பரங்கள் மீண்டும் செய்யப்படுகிறது.
துரோகம்
ஒன்றிய பாஜக அரசு புதுச்சேரி மாநில தேவைகளைப் பற்றி, மக்களின் நலனை பற்றி சிறிதும் கவ லைப்படாமல் தொடர்ந்து பல்வேறு துரோகத்தை செய்து வருவதை மாநில மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
திறக்காத ரேசன் கடைகள்
குறிப்பாக இந்தியாவில் ரேசன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச் சேரி மாற்றப்பட்டது. அன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மக்களை திரட்டி போராட்டம் நடத்தியது. இதன் எதிரொலியாக ரேசன் கடை கள் திறக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பு அறிவிப்பாக உள்ளது.
மக்கள் சொத்து சூறை
ஜவுளி பூங்கா என்ற பெயரில் தனியார் பஞ்சாலைகளுக்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கும் ஒன்றிய பாஜக அரசு, புதுச்சேரியின் அடை யாளமான பஞ்சாலைகளுக்கு நிதி ஒதுக்காமல், நிரந்தரமாக மூடி விட்டது. லாபத்தில் இயங்கி வரும் மின்துறை சொத்துக்களை சூறை யாடி, நாசமாக்க தனியார்மயமாக்கல் நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறது.
மதிய உணவும் பறிப்பு
அரசுப் பள்ளியில் படித்த மாண வர்களுக்கு 10 விழுக்காடு மருத்துவக் கல்வி இட ஒதுக்கீடும் மறுக்கப் பட்டுள்ளது. மத அடிப்படை கொண்ட அட்சய பாத்திர உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு மதிய உணவை பறித்துள்ளது.
ரூ.3,800 கோடி நிறுத்தம்
இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி பல் மருத் துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கே.வி.கே கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சொசைட்டி கல்லூரிகளுக்கு கடந்த 10 ஆண்டு களாக ஒன்றிய அரசு வழங்க வேண் டிய நிதி ரூ. 3,800 கோடி நிறுத்தி வைத்துள்ளது.
மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசின் இத்தகைய செயல்பாடுகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே மாநிலத்திற்கு தேவையான நிதியை வழங்கி, அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
அதோடு மாநிலத்தின் ரூ.11,000 கோடி கடனை உடனே ரத்து செய்வது டன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனே வழங்கவும், நிதிக் குழுவில் மாநிலத்தை இணைத்திடவும், மாநில சிறப்பு நிதியுதவி திட்டத்தில் புதுச்சேரியை இணைத்து ரூ.2 ஆயிரத்து 328 கோடியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு 100 விழுக்காடு நிதி உதவி வழங்க வேண்டும். இவ்வாறு ராஜாங்கம் தெரிவித் திருக்கிறார்.