பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் திங்களன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சட்டப்பேரவை அருகே பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் ந. தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் கவிஞர்கள், எழுத்தாளர்கள் திரளானோர் பங்கேற்று பாவேந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.