செங்கல்பட்டு, ஜன. 27- சோத்துப்பாக்கம் பகுதியில் பகல் நேரங்களில் செல்லும் கனரக வாகனங்க ளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக வாலிபர், மாணவர் சங்கங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சென்னை, கன்னியாகுமரி தொழிற் தட சாலை விரிவாக்கமான செய்யூர் வந்த வாசி சாலையில் கல்குவாரிகளில் இருந்து வரக்கூடிய கனரக வாகனம் ஜல்லி, செங்கல்,பார்மண்,கருங்கல்,எம். சென்ட். பி.சென்ட் அதிகபடியான லோடு களை ஏற்றிசெல்லப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான கனரக வாக னங்கள் தினசரி செல்கின்றன. இவ்வாக னங்களிருந்து ஜல்லி, எம்.சென்ட் மணல் சாலையில் விழுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் காலையிலும் மாலையிலும் அதிகமானோர் பயணிக்கின்றனர் மக்களின் பாதுக்காப்பை கருதி கனரக வாகனத்தின் வேகத்தையும், நேரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் நெரிசல் நேரங்களில் கனரக வாகன போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் ப. க. சத்யா தலைமையில் சோத்துப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விலக்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சதீஷ், மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், எஸ்எப்ஐ மாவட்ட தலைவர் சத்யா, மாவட்ட செயலாளர் தயாநிதி உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாநில துணைத்தலைவர் மு.தமிழ் பாரதி பேசினார்.