உளுந்தூர்பேட்டை, ஜன. 9- உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் சொந்த செலவில் அரிசி மற்றும் பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் கே.திருநாவுக்கரசு,துணைத் தலைவர் வைத்தியநாதன்,நகராட்சி செயற்பொறியாளர்,மேற்பார்வையாளர்கள், உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.