districts

img

போரூர் ஏரிக்கரையில் மீன் விற்பனைக்கு அனுமதி

சென்னை, பிப். 22 - போரூர் ஏரிக்கரையில் தொடர்ந்து மீன்வியாபாரம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. போருர் ஏரிக் கரை யோரம் பூந்தமல்லி சாலை யில் 40 ஆண்டுகளாக மீன் வியாபாரிகள் வியா பாரம் செய்து வந்த னர். இவர்களை ஆக்கிர மிப்பாளர்கள் என்று கூறி அவ்வப்போது வியாபாரம் செய்யவிடாமல் மாநக ராட்சி அதிகாரிகள் தடுத்து வந்தனர். மேலும், மீன், உடமைகளை அள்ளி குப்பையில் வீசுவது, மண்ணெண்ணை ஊற்று வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதை எதிர்த்து சென்னை மாநகர் சிறுகடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் இயக்கத்தை நடத்தியது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மாநகராட்சி ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தி யது. இதன்பின்னர் பாதிக்கப்  பட்ட 57 வியாபாரிகளை கணக்கெடுத்து, அவர்க ளுக்கு நகர விற்பனைக்குழு சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், தற்போது வியாபாரம் நடைபெறும் பகுதிக்கு அருகே காந்தி நகரில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் நிரந்தர மீன் அங்காடி அமைக்கவும் நகர விற்பனைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடி கட்டு மானப்பணி முடியும் வரை, ஏற்கெனவே வியாபாரம் செய்த பகுதியிலேயே மீன் விற்பனை செய்து கொள்ள மாநகராட்சி அனுமதித்துள்ளது. இந்தப் பணிகளை முன்னின்று செய்த நகர விற்பனைக்குழு உறுப்பி னர்கள் ஜெகதீசன், சித்ரா, கூட்டமைப்பு துணைத் தலைவர் மணிமாறன் உள்ளிட்டோருக்கு வியாபாரிகள் நன்றி தெரி வித்துள்ளனர்.