districts

img

மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க ஓய்வூதியர் மாநாடு வலியுறுத்தல்

உளுந்தூர்பேட்டை,செப்.3- மின்வாரியத்தை பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சங்கத்தின் 8ஆவது மாவட்ட மாநாடு உளுந்தூர் பேட்டையில் மாவட்டத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் சனிக்கிழமை (செப். 3) நடைபெற்றது. இணைச் செயலாளர் என்.அருணாச்சலம் சங்கக் கொடியை ஏற்றினார். செயற்குழு உறுப்பினர் எஸ்.வேலு வரவேற்றார். இணைச் செயலாளர் ராஜா ராம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் தங்க அன்பழகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜாமணி வேலை அறிக்கையையும், பொருளாளர் ஜி. கண்ணன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலசெயலாளர் கே.நீதிமாணிக்கம், விழுப்பு ரம் மாவட்டச் செயலாளர் எம்.புருஷோத்த மன், கடலூர் மாவட்டச் செய லாளர் டி.வெங்கடாசலம், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.அம்பாயிரம், சிஐடியு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளர் கே.சீனிவாசன், பொறி யாளர் சங்கத்தின் செய லாளர் பி.சம்பத்ராஜா, அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பார்த்தசாரதி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் ஜி.பஷீர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின்வாரிய ஆணை 2ஐ நீக்க வேண்டும், ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், மின்வாரியத்தில் காலியாக உள்ள 56,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக கே.ஆறுமுகம், செயலாள ராக ஆர்.ராஜாமணி, பொரு ளாளராக ஜி.கண்ணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

;