districts

img

குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா - ஆட்சியரிடம் கோரிக்கை

திருவண்ணாமலை. டிச. 17- குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு  அளித்தனர். திருவண்ணாமலை செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் 170 க்கும் மேற்பட்ட வீடுக ளில் மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.  கூலி வேலை  செய்து பிழைப்பு நடத்தி வரும் அவர்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்யச் சொல்லி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ்  வழங்கப்பட்டுள்ளது.  அங்கு வசிக்கும் மக்களுக்கு, அவர்கள்  குடியிருக்கும் குடிசை தவிர வேறு சொந்த இடமும் கிடையாது.  எனவே அவர்கள் வாழும்   வீட்டை காலி செய்தால், குடும்பத்து டன் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.இம்மக்கள்  தாங்கள் வசிக்கும் வீட்டிற்கு  முறையாக வரி செலுத்தி வருகின்ற னர்.  மின் இணைப்பு பெற்று, மின் கட்டண மும், குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் வரியும் செலுத்தி வருகின்றனர்.   எனவே  மாவட்டநிர்வாகம் மக்களின் இந்த  கோரிக்கை  மீது விசாரணை நடத்தி, தற்போது  அவர்கள்  வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், நகர செயலாளர் எம்.பிரகலநாதன், மாதர் சங்க தலைவர் செல்வி ஆகியோர் இம்மனுவை வழங்கினர்.

;