districts

img

குடிமனைகளை அளவீடு செய்ய லஞ்சம் கேட்கும் ஊராட்சி செயலாளர்

திருவள்ளூர், ஜூலை 30- கடம்பத்தூர் ஒன்றியத்தில் பழங்குடி இன மக்களின் குடிமனை களை அளவீடு செய்ய லஞ்சம் கேட்கும் குமாராச்சேரி ஊராட்சி செயலா ளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று (ஜூலை 30), கடம்பத்தூர் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  தொடுகாட்டில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2022 ஆம்  ஆண்டு 234 பழங்குடி இன குடும்பங் களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அவர்கள் 2023 ஆம் ஆண்டு அரசு  கொடுத்த 80 தொகுப்பு வீடுகள்  தொடுகாடு கிராமத்தில் கட்டப்பட் டுள்ளது. மேலும் இங்கு 70 குடிசைகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை, மின் விளக்குகள் அமைக்கப்படும் என 2023 ஆம் ஆண்டு கடம்பத்தூர் பிடிஒ எழுத்து பூர்வமாக உறுதியளித்தார்.இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாசனாம்பட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்கு அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் பணம்  விடுவிக்க  நடவடிக்கையில்லை. திருப்பாசூர் வசந்தம் நகரில் பட்டா  பெற்ற 37 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்க வேண்டும் என கடந்த ஒரு வருடமாக வலியுறுத்தியும் பதில் இல்லை இதனை தொடர்ந்து குமாரச்சேரி ஊராட்சியில் பழங்குடி இன மக்களிடம்  அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்க ரூ.500  கேட்ட புகாரின் பேரில் 15 நாட்களில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழங்குடியினர் மக்களுக்கு சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்றவை செய்து கொடுக்க  மாவட்ட ஆட்சியருக்கு பிரிந்துரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கடம்பத்தூர் பிடிஒ வரதராஜன் எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதற்கு சங்கத்தின்  மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார். இதில் சிஐடியு  மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன்,  மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள்  இ.கங்காதுரை, ஏ.வி.சண்முகம்,  ஜி.சின்னதுரை, குமரவேல், அற்புதம்,  தமிழரசி, தேவி, ஒன்றிய நிர்வாகிகள்  கே.முருகன், சின்னராசு, ஜி.ஆறுமுகம்,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.