districts

img

பல்லாவரம் சிறு வியாபாரிகள் சங்க 20வது ஆண்டு விழா

பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரச்சந்தை சிறு வியாபாரிகள் சங்கத்தின் 20வது ஆண்டு விழா பேரணி வெள்ளியன்று (ஜூலை 5) வாரச்சந்தையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவிடம், சங்கத்தின் சார்பில் ஓராண்டு தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் ஒய்.இஸ்மாயில், செயலாளர் ஜி.பூமிநாதன், பொருளாளர் பி.அஷ்ரப் அலி, சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு உள்ளிட்டோர் பேசினர்.