சென்னை,அக்.29- சென்னை லஸ் சர்ச் சாலையில் கிரியேட்டிவ் என்கிளே கட்டிடத்தில் அலங்காரா என்ற பெயரில் பெண்களுக்கான தனி சிறப்பு வாய்ந்த ஆடையகம் திறக்கப்பட்டுள்ளது. இளம் பெண் தொழில்முனைவோரான நிவேதிதா அவரது தந்தை எ.டி.புருஷோத்தமன் ஆகியோர் இதனை திறந்துள்ளனர்.ஆயத்த சல்வார்,டாப்ஸ், டிசைனர் சல்வார் சூட், அலியாகட் பிரிண்ட் குர்த்திகள், நைரோ கட் குர்த்தி, பிரத்யேக பிரைடல் எம்பிராய்டரி பிளவுஸ் என ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்ற ஆடைகள் இங்கு கிடைக்கும் என்று அலங்காரா பேஷன் விற்பனையகம் தெரிவித்துள்ளது.