பீர்க்கன்கரணை தேவநேசன் நகரில் உள்ள 30 இருளர் பழங்குடி இன குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நலம் செய்ய விரும்பு என்ற அமைப்பும் இணைந்து வழங்கின . அமைப்பின் நிர்வாகிகள் அனுராதா, லதா பெர்க்மான்ஸ், ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் தா.கிருஷ்ணன், ஜி.வெங்கடேசன் (தேவநேசன் கிளை) ஆகியோர் இதில் பங்கேற்றனர்.