சென்னை, ஜூலை 9-
தண்டையார்பேட்டை மேற்கு பகுதியில் குடி நீர் குழாயில் ஆயில் கழிவு கள் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்படு கின்றனர்.
தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலை யில் ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆயில்கள் பல்வேறு ரகங்களாக பிரிக்கப்பட்டு லாரிகள், ரயில் வேகன் மூலம் நாட்டின் இதர பகுதிகளுக்கு அனுப்பப்படு கிறது. ஆயில்கள் பிரிக்கப் படும் போது கீழே சிதறும் ஆயில்களை ஒழுங்கு படுத்தி சுத்திகரித்து அரு கில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் விடுவது வழக்கம்.
ஐஓசி அருகில் உள்ள கருணாநிதி நகர், பட்டேல் நகர், ராஜீவ் காந்தி நகர், வினோபா நகர், தமிழன் நகர், ராஜசேகர் நகர், நெடுஞ்செழியன் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதமாக குடிநீர் பைப்பு களில் ஆயில் வாடை வீசு வதாகவும், ஆயில் துளி கள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
சமீபத்தில் வினோபா நகரில் புதிதாக மெட்ரோ வாட்டர் குழாய்கள் மாற்றப்பட்டன. அதிலும் இதுபோன்று, ஆயில் கழிவுகளின் துகள்கள் வந்தன. இதனால் பொதுமக்கள் அந்த தண்ணீரை குடிக்க வும் முடியாமல், குளிக்க வும் முடியாமல் அவதிப்படு வதாகவும், மெட்ரோ வாட்டர் தண்ணீரை பயன் படுத்தினால் தோல் சம்பந்தப் பட்ட நோய் ஏற்படுவதாக வும், துர்நாற்றம் வீசுவதாக வும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனால் தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாவும், தொழிற் சாலையில் இருந்து வெளி யேற்றப்படும் ஆயில் கழிவு கள் பூமியில் இறங்கி மெட்ரோ வாட்டர் குழாய்களி லும் பரவி உள்ளதாக கூறு கின்றனர். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இந்த பிரச்ச னைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண அரசும், அதிகாரிகளும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.