வேலூர், ஜூலை 4 -
காட்பாடி சாலையை சீரமைக்க கோரி பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல் புதூரில் இருந்து வண்ட றந்தாங்கல் செல்லும் தெரு சாலையின் ஓரத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
அந்த பணியை தொட ர்ந்து மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது. கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தால் தெருவின் அகலம் சுருங்கி போனது. இதனால், அந்த வழியாக சென்று வந்த அரசு பேருந்து போக்கு வரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காட்பாடி-சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் தலை மையில் காவலர்கள் பொது மக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் மாநகராட்சி அதி காரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.