திருவண்ணாமலை, ஆக. 29- தங்களது கோரிக்கைகளை நிறை வேற்ற கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஆக. 29) சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்டத்தை வரவேற்கும் சத்துணவு ஊழி யர்கள், 40 ஆண்டு கால சத்துணவு திட்டத்தை சீர்குலைப்பதையும், சத்துணவு ஊழியர் களை அலைக் கழிப்பதையும் முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் விஜயா தலைமை தாங்கினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் க.அண்ணாதுரை, மாவட்டத் தலைவர் பார்த்திபன், செயலாளர் பிரபு, நில அளவை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜா, நிர்வாகிகள் அண்ணாமலை, தாண்டவ மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.