districts

சென்னை முக்கிய செய்திகள்

வழக்கு நிலுவையில் இருந்தால்  பாஸ்போர்ட் கிடையாது: உயர்நீதிமன்றம்!

சென்னை, மே 14- கடலூர் மாவட்டம், மங் கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தமிழர சன் என்பவர், பாஸ்போர்ட் கோரி, சென்னை மண்டல  பாஸ்போர்ட் அலுவல கத்தில் விண்ணப்பித் துள்ளார். அவரது விண்ணப் பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வன் கொடுமை தடைச் சட்ட  வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த தமிழரசன், தனக்கு பாஸ்போர்ட் வழங்க  உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்திருந் தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “வழக்கு  நிலுவையில் இருக்கும் போது, குற்றம் சாட்டப்பட்ட வர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால், அது குற்ற வழக்கின் விசாரணையைப் பாதிக்கும். பாஸ்போர்ட் சட்டத்தில், குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிரா கரிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதனால் குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த வழக்கை எதிர் கொண்டு, இறுதி முடிவுக்கு பிறகே வெளிநாடு செல்ல  முடியும். வழக்கு நிலுவை யில் உள்ள போது பாஸ் போர்ட் பெற முடியாது. அந்த முயற்சியை பரிசீலிக்க முடியாது” எனக் கூறி, மனு வைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

திருவள்ளூர்: 75.51 % தேர்வு

 திருவள்ளூர், மே 14- திருவள்ளூர்  மாவட் டத்தில்  மொத்தம் 244 பள்ளி கள் உள்ளன இதில் 105 தேர்வு மையங்களில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாண வர்கள் 13381,மாணவிகள் 14868 ஆக மொத்தம் 28249 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 10636 பேர், மாணவிகள் 13529  பேர் மொத்தம் 24165 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், திருவள் ளூர் வருவாய் மாவட்ட அளவில் மாணவர்கள் 79.49 விழுக்காடு தேர்ச்சியும், மாணவிகள் 90.99 விழுக்காடு தேர்ச்சி யும் ஆக மொத்தம் 85.54 விழுக்காடு தேர்ச்சி பெற்ற னர்.  102 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 6306,  மாணவிகள் 7503 ஆக மொத் தம் 13809 தேர்வு எழுதினார் கள். அதில் மாணவர்கள் 4046 மற்றும் மாணவிகள் 6381  ஆக மொத்தம் 10427 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 64.16 விழுக்காடும் மாணவி கள் 85.05 விழுக்காடு என மொத்தம் 75.51விழுக்காடு  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, மே 14- தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது 2024 சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை ஜூன் 7 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக அல்லது வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனங்க ளில் 100 விழுக்காடு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மாதம் ரூ.750  உதவித்தொகை, பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ1,000 , என்ஐஎம்ஐ  பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவி, 2 செட் சீருடைகள் தையல் கட்டணத்துடன், பேருந்து பாஸ், மூடு காலணி ஆகியவை தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சி நிலைய வளாகத்தில் தங்கிப் பயில விடுதி வசதி உண்டு. நேரடி சேர்க்கைக்கு துணை இயக்குநர், முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வடசென்னை (மிண்ட்) என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய  அரசு  பணியாளர் தேர்வாணையம் இறுதி வாய்ப்பு

சென்னை, மே 14- கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழ்களை வருகிற 28ம் தேதி இரவுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரி யங்கள் நிறுவனங்களில் அடங்கிய ஒருங்கி ணைந்த கணக்குப் பணிகள் பதவிகளுக் கான காலிப் பணியிடங்களில் நேரடி நிய மனம் செய்யப்படுகிறது. இதற்காக விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இத்தகைய விண்ணப்பதாரர்கள் வரும் 28ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தத் தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரி விக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில் அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் என்று, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட கல்கேரி  சுரேஷ் மனைவிக்கு கொலை மிரட்டல்

காவல்துறையினர் அலட்சியம்

கிருஷ்ணகிரி, மே 14- தேன்கனிக்கோட்டை வட்டம். தளி ஒன்றியம் அன்னியாளம் ஊராட்சி கல்கேரியில் நடைபெற்ற ஆலய நுழைவு போராட்டத்தில் முன்னின்ற சுரேஷ் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2018 இல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.  கொலையாளி  கைது செய்யப்பட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று  வருகிறது. கடந்த ஏப்ரல்19 அன்று சுரேஷின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.  கொலை செய்யப்பட்ட சுரேஷின் மனைவியும் அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் முருகேசனின் சகோதரியுமான ராஜம்மா தன் 2 பெண் பிள்ளைகள் ஒரு மகனுடன் கல்கேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 3 நாட்கள் தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் 8838036434 என்ற செல்போன் எண்ணில் இருந்து தகாத வார்த்தைகளை பேசியும் கொலை மிரட்டல் விடுத்தும் வந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக  தளி காவல் நிலையத்தில் ராஜம்மா புகார் அளித்துள்ளார். மாவட்ட காவல் துறைக்கும் புகார் மனுவை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளார். 14 ஆம் தேதி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இருந்து மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டு வந்துள்ளது. ஆனால் புகார் அளித்து 15 நாட்கள் கடந்தும் இதுவரை தளி,மற்றும் மாவட்ட காவல் நிலையத்திலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்துகாவல் நிலையத்தில் விசாரித்த போதும் பதில் அளிக்க மறுத்து விட்டனர். ஏற்கெனவே தீண்டாமை கொடுமை களுக்கு எதிராக போராடியதற்காக தலித் இளைஞர் கல்கேரி சுரேஷ் கொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த பிறகு தொடர்ந்து சுரேஷின் மனைவி ராஜம்மா மர்ம நபர்களால் செல்போன் மூலம் மிரட்டப்பட்டு வருவது குறித்தும் புகார் அளித்தும் தளி காவல் நிலையமும் மாவட்ட காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என்று ராஜம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்லூரிகளில் தமிழ்பாட வகுப்புகள் குறைப்பு: புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை,மே 14-  புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்ததை எதிர்த்தும், பட்டப்படிப்பு காலத்தை நான்கு ஆண்டுகளாக அதி கரித்ததை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, புதுச் சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்ட மைப்பின் சார்பில், அதன் நிறுவனர் சுவாமி நாதன் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் போன்ற பட்டப் படிப்புகளில் நான்கு செமஸ்டர்களுக்கு பயிற்று விக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது செமஸ்டர் களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், “தமிழ் மொழி பயிற்றுவிக்கும் நேரமும், வாரத்திற்கு நான்கு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை, நான்கு ஆண்டு களாக அதிகரித்துள்ள தாகவும்” மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் நான்கு செமஸ்டர்கள் மொழிப் பாடம் நடத்தப்படும் நிலை யில், புதுச்சேரியில் இரு செமஸ்டர்கள் மட்டும் தமிழ் மொழிப் பாடம் நடத்தப்படுவது மாண வர்களின் அடிப்படை உரி மையைப் பாதிக்கிறது. அதனால், 2023 – 24ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு பழைய நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, மனுவுக்கு பதில ளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு, விசார ணையை இரண்டு வாரங்க ளுக்குத் தள்ளி வைத்தது.

அரசு  ஐடிஐ நிலையத்தில் மாணவர் சேர்க்கை

திருவண்ணாமலை, மே14- வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை யின் கீழ் இயங்கும் திரு வண்ணாமலை மாவட்டத் தில் உள்ளஅரசுமற்றும் தனி யார் தொழிற் பயிற்சி நிலை யங்களில் 2024-2025  -ஆம் ஆண்டு பயிற்சியாளர் சேர்க்கை செய்ய skilltrai ning.tn.gov.in என்கிற இணைய தளம் வாயிலாக விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. விண்ணப்பப் பதிவு. 10.05.2024 அன்று துவங்கு கிறது. 7.6.2024 அன்று விண்ணப்பம் சமர்ப்பிப்ப தற்கான கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் - ரூ. 50 ஆன்லைனில் மட்டுமே செலுத்தவேண்டும்.எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்,  சாதிச்சான்றி தழ்,  ஆதார் அட்டை,  முன்னுரிமை சான்றிதழ்,  பாஸ்போர்ட்  சைஸ் புகைப் படம், கையொப்பம், இ மெயில் முகவரி, செல்பேசி எண், ஆன்லைனில் பணம் செலுத்திய விவரம்  உள்ளிட்ட ஆவ ணகளுடன், அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செய்யார் அரசுதொழிற் பயிற்சிநிலையம், ஜமுனா மரத்தூர் அரசுதொழிற் பயிற்சி நிலையம், ஆகிய இடங்களில் அமைக்கப் பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்திற்கு நேரில் வருகை புரிந்து சேர்க்கை தொடர்பான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில்   பிளஸ் 1 தேர்வில் 97.75 விழுக்காடு தேர்ச்சி

புதுச்சேரி, மே 14-  புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 1 தேர்வில் 97.75 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பிளஸ்-1 தேர்வு மார்ச் மாதம் துவங்கி நடை பெற்றது.  மாணவர்களின் தேர்வு முடிவு களை பள்ளி கல்வித்துறை சார்பில் செவ்வாயன்று (மே.14) வெளி யிடப்பட்டது.  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள 100 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 3,909, மாணவிகள் 3,701 என மொத்தம் 7,610 பேர் தேர்வு எழுதினர்.  வெளி யான தேர்வு முடிவுகளின் படி மாணவர்கள் 3,772, மாணவிகள் 3,667 என மொத்தம் 7,439 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 97.75விழுக்காடாகும். புதுச்சேரி பகுதியில் ஆண்கள் 3,660, பெண்கள்3,306 என மொத்தம் 6,966 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 3,546, பெண்கள் 3,273 என 6,819 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 97.89 விழுக்காடாகும். இதே போல், காரைக்கால் பகுதியில் ஆண்கள் - 249, பெண்கள் -395 என மொத்தம் 644 பேர் தேர்வு எழுதி னர். இதில் ஆண்கள்- 226, பெண்கள் -394 என 620 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.27 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர். புதுச்சேரியில் 44 பள்ளிகள், காரைக்காலில் 9 பள்ளிகள் என மொத்தம் 53 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை வருமாறு: தமிழ்-1, பிரெஞ்சு-66, ஆங்கிலம் -1, இயற்பியல் - 7, வேதியியல் -4, உயிரியல்- 1, கணிப்பொறி அறிவியல் -56, கணிதம்-6, பொருளியல்-13, வணிகவியல்- 3, கணக்கு பதிவியல் -6, வணிக கணிதம் 10, கணிப்பொறி பயன்பாடு -5 என மொத்தம் 179 பேர் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

;