districts

img

அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி,மே 19- ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி யில்  பயோடெக்னாலஜி துறையின் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.  வேளாண்-சுகாதாரம்-சுற்றுச்சூழல் துறைகளில் உயிரி தொழில்நுட்பத்தில் புதுமையான அம்சங்களை முன்வைத்து இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் முனைவர் வீ.மணிவாசகன் விளக்கி பேசினார். உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து முதல்வர் ஜி.ரங்கநாத், செயல்பாடுகள் குறித்து மாணவி சந்தியா, சட்டைவா செயல்முறைகள் குறித்து லைப் சயின்ஸ் பெங்களூரு விஞ்ஞானி சிவபாதசேகரன், கௌரவ விருந்தினராக அமெரிக்க லோட்டஸ் ரிசோர்சஸ் கார்ப்பரேஷன் முன்னாள் இயக்குநர் கிருஷ்ண மோகன், இளம் தொழில் முனைவோர் முதல்வர் ஸ்ரீதரன் ஆகியோர் பேசினர். நிறைவாக மாணவர் தருண் குமார் நன்றி கூறினார்.

;