districts

img

புதுச்சேரியில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம்

புதுச்சேரி, ஆக.16-

     புதுச்சேரியில் ரூ.483 கோடியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமை க்கப்படும் என முதலமைச்சர் ரங்க சாமி தெரிவித்தார்.

    நாட்டின்  77வது சுதந்திர தின விழா  புதுச்சேரி கடற்கரை சாலையில் செவ்வாய்கிழமை(ஆக.15) கோலாகலமாக  கொண்டாடப்பட் டது. இவ்விழாவில் முதல்வர்  ரங்க சாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

    அதனை தொடர்ந்து உரை யாற்றிய அவர்,“ தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடியில் சட்டசபை வளா கம், காலாப்பட்டில் ரூ.483 கோடி யில் தேசிய சட்ட பல்கலைக்கழகம்  கட்டப்பட உள்ளது”என்றார்.

     புதுச்சேரி மெரினா கடற்கரை யில் ரூ.14 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது என்றும் இந்த  நீரை குழாய்கள் மூலம் கொண்டு செல்ல ரூ.12 கோடியில் திட்டம் தயாரிக் கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரி வித்தார்.

     மழை காலத்திற்கு முன்பு அனைத்து வாய்க்காலும் 190 கி.மீ. நீளத்துக்கு சுமார் ரூ.4 கோடி யில் தூர்வாரப்படும். பிள்ளை யார்குப்பம் படுகை அணை ரூ.20 கோடியில், பாகூர் ஏரிக்கரையில் ரூ.8 கோடியில் ஒரு வழி பாலம், கொம்மந்தான்மேடு  அணைக்கட்டு ரூ.13 கோடியில் கரைகளை செம்மை ப்படுத்தப்பட்ட. குடுவை ஆற்றில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டுவது உள்ளிட்ட நீர் நிலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப் படும் என்றும் முதல்வர் அறி வித்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடல் கட்டுமான பணி முடி வடைந்து இந்த ஆண்டே திறக்கப் படும். சின்னையா புரத்தில் ரூ.23 கோடியில் 220 அடுக்கு மாடி குடி யிருப்புகள் இந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். ரூ.23 கோடியில் மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டு இந்த  நிதியாண்டிற்குள் மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.

     முதலமைச்சரின் உரையை தொடர்ந்து, முப்படையினர், காவல்துறையினர், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி யாற்றியவர்களுக்கு விருது, பதக்கங் களையும் முதல்வர் வழங்கினார். இறுதியாக மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளுடன் விழா முடி வடைந்தது.

     விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், பேரவை துணைத் தலைவர் ராஜ வேலு, எதிர்கட்சித் தலைவர் சிவா, செல்வகணபதி எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலா ளர் ராஜீவ் வர்மா மற்றும் அரசு அதி காரிகள் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

    சுதந்திர தின  விழாவையொட்டி கடற்கரை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கடற்கரை சாலையின் பின்புறம் கடலில்  கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.