districts

img

சாதிச்சான்று, பட்டா கிடைக்காத மலைக் குறவர் இன மக்கள்

சிதம்பரம்,டிச.13- காட்டுமன்னார்குடி அருகே உள்ள கொளக்குடி, ஓமாம்புலியூர், இலுப்பைத்தோப்பு, திரு மூலஸ்தானம், கோயில் பத்து, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட  இந்து மலைக்குறவர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். போதிய இடவசதி இல்லாமல் ஒரே குடிசைக்குள் 2 அல்லது 3 குடும்பங்கள் ஒன்றாக வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது வசித்து வரும் அந்த குடிசைகளுக்கும் பட்டா கிடையாது. குழந்தைகளை பள்ளியில்  சேர்பதற்கு சாதி சான்றும் இல்லை. ஆதார், ரேசன் அட்டைகளும் வழங்கவில்லை.  மலைக் குறவர் மக்கள் வசிக்கும் இடத்திற்கு மனைப்பட்டா குழந்தை கள் படிப்பற்கு சாதிச் சான்று வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் ராம தாசிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.   கட்சியின் வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், விமலகண்ணன், பொன்னம்பலம், தினேஷ்பாபு, சிங்காரவேலு, கிளைச் செயலாளர்கள் தேசிங்கு, தனபால், நீலமேகன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

;