கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஆவடியில் இருந்து ஆய்வாளர் பாலசுப்பிரமணி தலைமையில் 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கடலூர் வந்தனர். பின்னர் அவர்கள் தேவனாம்பட்டினத்தில் உள்ள ஒரு முகாமில் மீட்பு உபகரணங்களுடன் தங்கியுள்ளனர்.கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஆவடியில் இருந்து ஆய்வாளர் பாலசுப்பிரமணி தலைமையில் 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கடலூர் வந்தனர். பின்னர் அவர்கள் தேவனாம்பட்டினத்தில் உள்ள ஒரு முகாமில் மீட்பு உபகரணங்களுடன் தங்கியுள்ளனர்.