districts

img

தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த 13 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு

வேலூர்,டிச.22- வேலூர் பழைய பேருந்து நிலை யத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கொரோனா தொற்றின் ஒரு வகையான ஒமைக்ரான் வைரஸ், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணை யர் அசோக்குமார், சுகாதார இணை இயக்குநர் கண்ணகி மாநகர் நல அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை  செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 104 பேருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி யானது. நைஜீரியாவில் இருந்து வந்த 1 நபருக்கு மட்டும் ஓமைக்ரான் தொற்று உள்ளது. 44 நபர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு நடத்திய சோதனையில் ஒமைக்ரான் தொற்று ஆரம்ப அறிகுறி எஸ் -ஜீன்,8 நபருக்கு டெல்டா தொற்று காணப்படுகிறது. 22 நபர்கள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.  

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 82.5விழுக்காடும், இரண்டாம் தவணை செலுத்தி கொண்டவர்கள் 50 விழுக்காடும் உள்ளனர்.     கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலம் வருவதால் உலக சுகாதார நிறு வனம், ஒன்றிய சுகாதாரத்துறை வழி காட்டுதல்களோடு தாக்கம் உள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்படும். மற்ற பகுதிகளுக்கு தடைவிதிக்கும் எண்ணமில்லை. பூஸ்டர் டோஸ் மருத்துவ வல்லு நர்கள் கருத்து மூலம் ஒன்றிய அரசு அறிவிப்பு கொண்டு முடிவு செய்யப்படும். ஒமைக்ரான் தொற்று கண்டறி வதற்கு மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. தமிழக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது டிஎம்எஸ் வளாகத்தில் அதற்கான வசதிகள் செய்யப்பட்டு ள்ளது. ஒன்றிய அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டிய கடைசி நிலையில் உள்ளது. அனுமதி கிடைத்த வுடன் இங்கு ஆய்வு செய்து முடிவு கள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு 5575 பேருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளது. டெங்கு குறித்து மக்களிடம் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். மேலும் பறவைக் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய் பரவலை கட்டுப்படுத்துவதிலும் 13 மாவட்டங்களில் உள்ள மாநில எல்லைகளில் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

;