districts

img

வசதியற்ற மாணவர்களுக்காக நவீன கணினி ஆய்வகம்

சென்னை, ஜூலை 28-
தொழில் நுட்பகல்வி வழியாக வசதியற்ற ஏழை எளிய மாணவர்கள் திறனதிகாரம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு ஓரியன் இன்னோவேஷன் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. 
நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக அம்பத்தூரில் அமைந்துள்ள டிவி நகர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர் நலனுக்காக கணினி ஆய்வகத்தை ஓரியன் அமைத்து தந்துள்ளது. அம்பத்தூர் ரோட்டரி கிளப் ஆதரவோடு இந்த ஆய்வகம் இயங்கி வருகிறது. துவக்க நிகழ்ச்சியில் ஓரியன் நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவு  தலைவர். பிரதீப் மேனன், துணைத்தலைவர் ரமேஷ்பாபு, முத்துவேல் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.