சென்னை, டிச. 7- தமிழக அரசு தொழிலாளர்களின் விடிய லுக்கான அரசாக திகழும் என கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை மாநாட்டில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசினார். தமிழ்நாடு கட்டட கட்டுமானத் தொழி லாளர்களின் மாநில கோரிக்கை மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் ப.மாணிக்கம் நூற்றாண்டு அரங்கில் செவ்வாயன்று (டிச. 7) நடைபெற்றது. மாநிலத் தலைவர் நா.பெரியசாமி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் ஏ.எஸ்.கண்ணன் வரவேற்றார். மாநாட்டை ஏஐசிடியு மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி துவக்கி வைத்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ரவி கோரிக்கை களை விளக்கிப் பேசினார். தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகை யில், தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு,க,ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஆய்வு மேற்கொண்டதில் நலவாரிய பயனாளிகள் 75 ஆயிரம் பேரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, மரண உதவி உள்ளிட்ட பல்வேறு நலவாரிய பயன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேருக்கு பணப்பலன்கள் வழங்கப் பட்டன. 1.12.2021 வரை மீதமுள்ள 57 ஆயிரம் பேருக்கும் பணப்பலன்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன என்றார். கேரள அரசை பின்பற்றி துணிக்கடை கள், மால்களில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என முதல்வர் உத்தர விட்டார். நலவாரியத்தில் பதிவு செய்வ தற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தற்போது முதல்வர் கட்டுமான தொழி லாளர்களுக்காக வீடு கட்டம் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட 21 கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகை யில், கொரோனா பெருந்தொற்றின் போது, கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதா ரம் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் ஒன்றிய அரசு கொரோனாவால் வாழ்வா தாரத்தை இழந்த எந்த தொழிலாளர்களுக்கும் 1 ரூபாய் கூட வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார். நலவாரியத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. தற்போது மாநில அரசிடம் உள்ள நலவாரியங்களையும் ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஒன்றிய அரசின் முயற்சியை தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் இரா.நல்லகண்ணு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். வரவேற்புக் குழு செயலாளர் ஆர்.துரைசாமி நன்றி கூறினார். முன்னதாக கொத்தனார் கவிஞர் பரிணாமன் எழுதிய “எங்களைத் தெரியலையா பாடல்’’ ஒலிபரப்பப்பட்டது. மாநாட்டில் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.செல்வராஜ், மாநிலப் பொருளாளர் இரா.முருகன், புதுவை மாநில கட்டடக் கலைத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜெ.சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர்.