districts

img

மேல்பாதி கோவில் விவகாரம் கோட்டாட்சியர் மீண்டும் விசாரணை

விழுப்புரம்,ஜூலை 10-

     விழுப்புரம் மாவட் டம், கோலியனூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த  திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக் கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் வசித்து வரு கின்றனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் இக்கோவில் திருவிழா நடந்தது. அப்போது, இந்த கோயில் உள்ளே சென்று வழிபாடு நடத்த காலம் காலமாக தீண்டாமையை கடைபிடித்து வரும் மற்றொரு தரப்பினர் அனுமதி மறுத்தனர்.

    வழிபாடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் அதிகாரிகள் கோவிலுக்கு சீல் வைத்தனர். பிறகு, கோட்டாட்சியர் அலுவ லகத்தில் 2-ம் கட்ட விசாரணை ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் ஒரு சமூ கத்தினர் தங்கள் கருத்துக்  களை தெரிவித்திருந்தனர்.  

    இந்நிலையில் மற்றொரு சமூகத்தினர் தங்கள் தரப்பு நியாயங்களை ஜூலை 10 ஆம் தேதி கோட்டாட்சி யர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்து கூறினர். விரைவில் இருதரப்பு வாதங்களின்அ டிப்படையில் கோட்டாட்சி யர் நடவடிக்கை எடுப்பார் என தெரிகிறது.