districts

img

உளுந்தூர்பேட்டையில் பாலியல் வணிகம் சிறப்புக் குழு விசாரணைக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, செப். 6 - உளுந்தூர்பேட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை வணிக ரீதியில் பாலியல் தொழி லில் ஈடுபடுத்தியவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஸ்ரீராம் நக ரில் வாடகை வீடு எடுத்து 17 வயது சிறுமி மற்றும் இளம் பெண்களை பாலியல் தொழி லில் ஈடுபடுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட நான்கு நபர்களை மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. பாலியல் வணிகத்தில் ஈடுபட்ட தாக கூறி கடந்த ஆக.18 அன்று வழக்கு பதிவு செய்த காவல்துறை யினர் ஐந்து நபர்களை கைது செய்தனர். அப்போது, சிறுமி மற்றும் இளம் பெண்ணையும் காவல்துறையினர் மீட்டனர். பள்ளி சிறுமிகளை பாலியல் வணி கத்தில் ஈடுபடுத்தியது பல்வேறு பெண்களின் புகைப்படங்களை வாட்ஸ் அப் குழு மூலம் பகிர்ந்து, ஜி பே, போன் பே மூலம் பணம் பெற்றுக் கொண்டு வசதி படைத்த அரசு அதிகாரிகள் அரசியல் வாதிகள் தொழிலதிபர்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள் என உளுந்தூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விஐபிகள் விரும்பிய இடத்திற்கு பெண்களை அனுப்பி வைப்பதை தொழிலாக செய்து வந்துள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் பழங்குடி இருளர் சமூ கத்தைச் சார்ந்த பெண்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது போஸ்கோ மற்றும் எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் காவல்துறையினர் அமைதியாக இருந்துள்ளார். இதனால், கைது செய்யப்பட்ட நபர்கள் ஐந்து நாட்களில் பிணை யில் வெளிவந்துள்ளார். எனவே, பாலியல் வணிகத்தில் பெண்களை ஈடுபடுத்திய கும்பல் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்ய வேண்டும். போஸ்கோ, இந்திய தண்ட னை சட்டம் பிரிவு 366 ஏ, தகவல் தொழில் நுட்ப பிரிவு 67, வன்கொடுமை தடுப்பு சட்டங்க ளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து முழுமை யாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விழுப்புரம், கடலூர், கள்ளக் குறிச்சி, செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வர்களுக்கும் இந்த குற்றச் செய லில் தொடர்பு இருப்பதால் சிறப்பு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளனர். சங்கத் தலைவர்கள் இ.அலமேலு, ஏ.தேவி,துணைச் வீ.சந்திரா, ஏ.சக்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு பி.சுப்பிரமணி யன் ஆகியோர் உடனிருந்தனர்.