மதுரை, அக்.22- மதுரை எய்ம்ஸ்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக நாகராஜ் வெங்கட்ராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பும் கூட மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் மக்களவை உறுப்பினர்களின் தொடர் வற்புறுத்தலால் தான் வெளி யாகியுள்ளது.கடந்த 2019-ஆம் மதுரை மாவட்டம் தோப்பூரில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். ஆனால் தற்போது வரையிலும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.