districts

img

50 ஆண்டு கால தாகத்தை தீர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பட்டியலின மக்கள் பாராட்டு

விழுப்புரம், ஜன.28- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஊராட்சிக்கு உட்பட்டது எஸ்.கடூர் குக்கிராமம்.  இங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து தரப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தர அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் அலுவலங்களுக்கு நடையாய் நடந்தும் எந்த பயனும் இல்லை. தினமும் சுமார் 1 கிலோ  மீட்டர் தூரத்திற்கு சேரும், சகதியுமாக உள்ள சவுக்கு தோப்புக்கு சென்று தலை சுமை யாக தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதே போல், ஒலக்கூர் கிராமத்தில் இருந்து எஸ்.கடூர் கிராமத்திற்கு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தார் சாலை முழுவதும் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட சென்று வர முடியாது.  தெருக்களிலும் மின் விளக்குகள் கிடையாது. இதனால், இருளி லேயே அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எஸ்.கடூர் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்த னர். பின்னர், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலு வலரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை யும் கொடுத்தனர். மேலும், அடிப்படை வசதிகள் இல்லாமல் காடூர் கிராம மக்கள் அனுபவித்து வரும் சிரமங்களை காணொலியாக பதிவு செய்தும் வெளியிட்டனர்.  இதையடுத்து, முதற்கட்டமாக எஸ்.கடூர் கிராமத்திற்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கிய அரசு அதிகாரிகள் தண்ணீர் விநியோகம் செய்தனர். திண்டிவனம் வட்டச் செயலாளர் அ.கண்ணதாசன், வட்டக்குழு உறுப்பினர் ஏ.ம.சதீஷ்குமார், வாலிபர் சங்க நிர்வாகிகள் கே.சிவக்குமார், கா.ரவிசந்திரன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். 50 ஆண்டு கால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரசு அதி காரிகளுக்கும் எஸ்.கடூர் மக்கள் நன்றி தெரி வித்தனர். இந்த கிராமத்திற்கு சாலை அமைத்து கொடுக்க வேண்டும், இருளில் மூழ்கி இருக்கும் தெருக்களில் மின் விளக்கு பொருத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.