எல்ஐசி பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும், முகவர்களின் குழுக்காப்பீடு அதிகபட்ச வயது 69 என்பதை நீக்க வேண்டும். பாலிசி சேவைகளுக்கு அனைத்து கிளைகளிலும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டும். கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்கு உதவிடும் பீமா சுகம், பீமா விஸ்டார், பீமா வகாப் ஆகியவைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் ராணிப்பேட்டை எல்ஐசி வாயில் முன்பு மாநிலச் செயலாளர் தா. வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே. ரவிக்குமார், கிளைத் தலைவர் ரத்தினம் ஜெயக்குமார், செயலாளர் என். செல்வம், பொருளாளர் பி. ஏழுமலை, கே. கணேசன், லோகநாதன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தலைவர் வினோத், செயலாளர் அக்பர், பொருளாளர் பரத் உள்ளிட்டோர் உரையாற்றினர்.