districts

கடந்த மாதம் மெட்ரோ ரயிலில் 74 லட்சம் பேர் பயணம்

சென்னை,ஜூலை 3-

     மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதத்தில் 66 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் 72 லட்சத்து 82 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 74 லட்சத்து 6 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச மாக கடந்த 28 ஆம் தேதி மட்டும் 2 லட்சத்து 95 ஆயிரத்து 509 பேர் பயணம் செய்தனர். வாட்ஸ்அப் டிக்கெட்  (8300086000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச் சீட்டு களை முன்பதிவு செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;