districts

img

விழுப்புரத்தில் சாலையோரங்களில் விற்பனைக்கு வந்த கோலமாவு

விழுப்புரம்,டிச.16- விழுப்புரத்தில் சாலையோரங்களில் கோலமாவு விற்பனை நடந்தது. இதை ஆர்வமுடன் பெண்கள் வாங்கி சென்றனர். வீதியெங்கும் வண்ண வண்ண கோலங்கள் மின்னுவதும், விடியற்காலையில் ஒலிக்கும் பஜனை பாடல்களும் மார்கழி மாதத்தின் தனிச்சிறப்புகளாகும். இம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீட்டின் வாசலை சுத்தம் செய்து வண்ண கோலமிடுவார்கள். இதையொட்டி விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் வீதி வீதியாக வாகனங்களில் வண்ண கோல மாவு கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் ஆங்காங்கே சாலையோரங் களிலும் வண்ண கோல மாவினை சாக்கு மூட்டைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 1 கிலோ கோல மாவு ரூ.30-க்கு விற்கப்படுகிறது. இதனை ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

;