districts

img

கொடுவா மீன் அறுவடைத் திருவிழா

திருவள்ளூர், ஜூலை 8-

     கொடுவா மீன் அறு வடைத் திருவிழா சனிக்கிழ மையன்று (ஜூலை 8)  காட்டூரில்   நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா, எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்க ளுக்கு உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று வாழ்வா தாரம் ஏற்படுத்தும் விதத்தில் இயற்கை முறையில் மீன் வளர்க்க ஐ.சி.ஏ.ஆர்-சிபா திட்டத்தில் காட்டூர் இருளர் பழங்குடி குடும்பங்களை தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக இணைந்துள்ளனர்.

    இக்குழுவிற்கு சிந்தா மணி ஈஸ்வரர் பழங்குடி குடும்பங்கள் குழு என்று பெயர் சூட்டி இவர்களை பங்காளர்களாக தேர்ந்தெ டுத்துள்ளனர். இவர்கள்  பண்ணை அமைத்து சிறு தொழில் செய்யும் பொருட்டு கொடுவா மீன் வளர்த்து வருகின்றனர்.இதன் வளர்ப்பு காலம் முடிந்து இதற்கான மீன் அறு வடை திருவிழா நடை பெற்று விற்பனையும் நடை பெற்றது. இதற்கான விழா வில் ஐசிஏஆர்சிபா திட்டத்தின் தலைவியும் மூத்த விஞ்ஞானி சாந்தி தலைமை வகித்தார்.இத்திட்டத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் டி.செந்தில் முருகன்,காட்டூர் ஊராட்சி மன்ற தலை வர் செல்வராமன் துணைத் தலைவர் ரேவதி, ஊராட்சி செயலர் சந்திர பாபு,கல்வியாளர் உமா சங்கர் மற்றும் பழங்குடி கிராம நிர்வாகிகள் பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.