districts

img

கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் இலவசக்காட்சி: தமிழக அரசு ஏற்பாடு

சென்னை, செப். 3 - ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தை கட்டணமின்றி திரையிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கில் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் செப்.5 அன்று காலை 10 மணிக்கும், செப்.6 அன்று காலை 10.30 மற்றும் பிற்பகல் 2 மணிக்கும் நவீன முறையில் (டிஜிட்டல்) திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட காட்சிகளுக்கு அனுமதி இலவசம். எனவே, பொதுமக்கள் கட்டணமின்றி கண்டுகளிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

;