districts

img

இணையத்தில் கந்து வட்டி - கட்ட முடியாமல் மென்பொறியாளர் தற்கொலை 

சென்னையில் இணையத்தில் கந்து வட்டி வாங்கி சரியாக கட்ட முடியாமல் மென்பொறியாளர் (சாப்ட்வேர் இன்ஜினியர்) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நியூகாலனி 8 ஆவது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சாய்அரவிந்த் (23). இவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்த படியே வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக மன அழுத்தமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு அவரது தாய் வந்தபோது சாய் அரவிந்த் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சாய் அரவிந்த் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கடந்த சில நாட்களாக பணி பளு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், அவர் இணையத்தில் செயலி மூலம் கந்து வட்டிக்கு பணத்தை கடனாக பெற்றுள்ளனர். உரிய காலத்தில் பணத்தை திருப்பி தர முடியாததால் தற்கொலை செய்துள்ளார் என கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.