districts

img

எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியில் விற்பனை செய்ய இடம் ஒதுக்குமாறு அறிவுறுத்தல்

சென்னை, பிப். 22- மகா கவி பாரதியார் நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியில் விற்பனை செய்ய இடம் ஒதுக்குமாறு துணை ஆணையர் மாநகராட்சி அதிகாரிகளிடம் அறி வுறுத்தினார். எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியை விற்பனை மண்டலமாக அறி விக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனை யாளர்கள் சங்கத்தின் சார்பில் வடக்கு மாவட்ட வட்டார துணை ஆணையர் கட்டா தேஜா ரவியிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து துணை ஆணையர் கட்டா ரவி தேஜா மண்டலம் 4க்கு உட்பட்ட எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியை மாநகராட்சி அதிகாரிகளுடன் வந்து பார்வையிட்டு, அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி 80 வியாபாரிகளுக்கு வழங்குமாறும், மண்டலம் 5க்கு உட்பட்ட எம்.சி. ரோடு பகுதியையும் ஆய்வு செய்து விற்பனைக்குழு உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள் ஆலோசனையுடன் ஸ்மார்ட் சிட்டி வேலை முடிந்தவுடன் அதே பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வியா பாரம் செய்யும் வகையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யுமாறும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதில் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், பொருளாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், நகர விற்பனைக்குழு உறுப்பினர் எஸ்.நாகபூஷணம், ஜி.மோனிஷா, கே.பல ராமன், சங்க ஆலோசகர்கள் எம்.ராஜ்குமார், எஸ்.பவானி, மாநகராட்சி வணிக வளாகம் சங்கத்தின் தலைவர் கே.செல்வானந்தன், செயலாளர் எஸ்.காசிம், நிர்வாகிகள் டி.மாரி, பி.ராஜகுரு, ஆர்.ராதாகிருஷ்ணன், எம்.சி. ரோடு ஜி.ஏ ரோடு நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பாக்கியலட்சுமி நிர்வாகிகள் மணிமேகலை, முகமது ரபி,சிவகாமி, சென்ட்ரல் அவென்யூ சங்கத்தின் செயலாளர் எஸ்.அறிவழகன், தலைவர் எஸ்.மீரா மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.