திருவள்ளூர், மே 14- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிறன்று (மே12), ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது இதற்கு மாவட்ட தலைவர் ஆர் முருககனி தலைமை தாங்கினார். பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் விதிமுறை களை எளிதாக வேண்டும், ஊரக பத்திரி கையாளர்களை நல வாரியத்தில் உடனடி யாக இணைக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்திரிக்கை யாளர் ஊதிய குழுவை மீண்டும் கொண்டு வர வேண்டும், பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட செயலாளர் எம்.யுவராஜ் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் ஏ.ஆர்.லட்சுமணன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட பொதுச் செயலா ளர் பெ.ரூபன் வேலை அறிக்கையையும், வரவு செலவு கணக்கை பொருளாளர் வி.பி.கோவிந்தராஜுலும் முன்வைத்தனர். சங்கத்தின் சார்பில் 30 பத்திரிகையாளர் களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு செய்யப்பட்டது அதன் பத்திர நகலை டியூஜெ சங்கத்தின் மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வழங்கி சிறப்புரை யாற்றினார். மாநில பொதுச் செயலாளர் கே.முத்து, மாநில அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலாங்கன், சென்னை மாவட்ட தலைவர் எஸ்.பி.தேவேந்திரன், செயலாளர் ம.மீ.ஜாபர், பொருளாளர் ஏ.அப்சர்பாஷா, வேலூர் மாவட்ட தலைவர் வெ.கல்யாணசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.நாகராஜ் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் மாவட்ட தலைவராக வி.பி.கோவிந்த ராஜுலு, மாவட்ட பொதுச் செயலாளராக பெ.ரூபன், பொருளாளராக என்.முனுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.