districts

img

இன்னுயிர் காப்போம் திட்ட பயனாளி சிகிச்சை தொகை உயர்கிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூன் 14 - ‘இன்னுயிர் காப்போம்; நம்மைக்  காக்கும் 48’ திட்டத்தில் பயனாளி களுக்கு வழங்கப்படும் சிகிச்சை  தொகை விரைவில் 2 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது என்று  மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையின் 188வது மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு விழா  வெள்ளியன்று (ஜூன் 14) கலை வாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிர மணியன் மாணாக்கர்களுக்கு சான்றி தழ் வழங்கி பேசியதன் சுருக்கம் வருமாறு: தமிழகத்தில் 2 ஆயிரத்து 553  மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க  ஜூலை 15ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது சான்றிதழ் பெற்றவர்களும் அதற்கு விண்ணப்பிக்கலாம். சென்னை மருத்துவக் கல்லூரி யில் பயிலும் மாணவர்களில் 7 பேர்  ஒன்றிய அரசு பணியாளர் தேர்வா ணைய (யுபிஎஸ்சி) தேர்வில் தேர்ச்சி  பெற்றிருக்கிறார்கள். இன்செட் தேர்வில் 5 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.

அதாவது 150 பேரில் 5 பேர் இந்த கல்லூரியை சேர்ந்தவர்கள். அவர்கள் எந்த இடம் கேட்டாலும் கிடைக்கும் என்ற தகுதியை பெற்றுள்ளனர். 2 ஆயிரத்து 553 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்வை 40 ஆயிரம் பேராவது எழுது வார்கள். அதில் இந்த கல்லூரி மாண வர்கள் பெருமளவு தேர்ச்சி பெற வேண்டும். ‘இன்னுயிர் காப்போம்; நம்மைக்  காக்கும் 48’ திட்டத்தில் பயனாளி களுக்கு வழங்கப்படும் தொகை விரைவில் 2 லட்சமாக உயர்த்தப்பட  உள்ளது.

எழும்பூர் அரசு மருத்துவ மனையில் தொடங்கப்பட்டுள்ள ஏழை, எளிய பெண்கள் செயற்கை கருத்தரித்தல் திட்டம் மிக விரைவில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ளது.  இந்நிகழ்வில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், துணை முதல்வர் மரு.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;