சென்னை,ஜூலை 5-
வடசென்னை பகுதியில் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறும் அலுவலகம் செங்குன்றம் சார்பதி வாளர் அலுவலகம் இருந்து வருகி றது. செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் நில விற்பனை தொழில் கொடி கட்டி பறந்து கொண்டி ருக்கிறது.
இதனால் தினமும் செங் குன்றம் சார்பதிவாளர் அலுவலகத் தில் பத்திர பதிவு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பத்திர பதிவு நடை பெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திர பதிவு செய்யப்படு வதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தினர். செவ்வா யன்று (ஜூலை 4) காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது.
இதில் பத்திரப்பதிவு அலுவலகத் தில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 17 மணி நேரம் நடைபெற்ற சோதனை புதனன்று (ஜூலை 5) காலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
இதே போன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.