பொன்னேரி,ஜூலை 4-
மீஞ்சூரில் பிளைவுட் மரக்கடையின் முதல் தளத்தில் திங்களன்று தீப்பற்றியது. தீயானது மெதுவாக கீழே உள்ள மரக்கடைக்குப் பரவியது. உள்ளே அடுக்கி வைக்கப் பட்டிருந்த பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் முழுவதுமாக தீப்பிடித்தது. தகவலறிந்து அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலைய தீயணைப்பு வாகனம், வல்லூர், பொன்னேரி, எண்ணூர், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட 5 தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பொன்னேரி-திருவொற்றியூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீ விபத்தில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் மரங்கள் எரிந்து நாசமாயின.