சென்னை,ஜூலை 24-
சென்னையில் பிரபல நகை நிறுவனமான கசான்ஜி ஜூவல்லர்ஸ் பொது பங்கு வெளியீட்டில் இறங்கி யுள்ளது.
ஐபிஓ வெளியீட்டின் மூலம் ரூ,96.74 கோடி திரட்ட வுள்ளது. ரூ.10 மதிப்புள்ள 6 லட்சத்து 91ஆயிரத்தி பங்கு களை ஒவ்வொறு பங்கிற் கும் ரூ.140 என்ற மாறா விலையில் (ஒவ்வொறு பங்கிற்கும் பிரீமியமாக ரூ.130 உள்பட) ரூ.96.74 கோடியை திரட்ட திங்க ளன்று (ஜூலை24) பங்கு வெளியீடுகிறது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் பெறப்படும் நிகர நிதியில் இருந்து இந்நிறுவ னம் ரூ.8.62 கோடியை புதிய ஷோரூம்கள் திறப்ப தற்கும் ரூ.20 கோடியை புதிய ஷோரூம்களுக்கான இருப்பு பொருட்களுக்கும் ரூ.55 கோடியை நடப்பு மூலதனத் திற்காகவும் ரூ.12 கோடியை நிறுவனத்தின் பொதுப்படை யான நோக்கங்களுக் காகவும் பயன்படுத்தும். இந்த பங்கு வெளியீடு ஜூலை 28ஆம் தேதி முடி வடையும் என்று நிறுவனத் தின் தலைவர் தாராசந்த் மேத்தா கூறினார்.