விழுப்புரம், ஜூலை 6-
விழுப்புரம் நகரத்தில் பூட்டிய வீட்டின் பின்புற கதவை உடைத்து பீரோவில் இருந்த எட்டு சவரன் நகையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலை யில் உள்ளது அண்ணாமலை நகர். இங்கு குடியிருந்து வருபவர் ஜாபர் சேட் (54). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூருக்கு சென்று இருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 6) வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கதவு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. பிறகு, இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.