மலைக்குறவன் (எஸ்டி) சாதிச் சான்று கிடைக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பு தீக்குளித்து இறந்துபோன வேல்முருகனின் மனைவி சித்ரா, விரக்தியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் சந்தித்து ஆறுதல் கூறினார்.