districts

img

நேஷனல் பேமிலி ரெஸ்டாரன்ட் அஞ்செட்டியில் கோலாகல திறப்பு

கிருஷ்ணகிரி, ஜன.1- அஞ்செட்டியில் ஒகேனக்கல் சாலை, காவல் நிலையம் நேஷனல் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டது. இது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அஞ்செட்டி வட்டத் தலை வர் பி. கோவிந்தசாமி - லட்சுமி குடும்பத்திற்கு சொந்தமானதாகும்.  இந்த ரெஸ்ட்ரான்ட்டை பி.கோவிந்தசாமியின் தாயார் மாதம்மாள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சகோதரர்கள் பி.ராஜவேல் பி.பூபதி குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் குமரவேல்,  மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.தேவ ராஜன் வாலிபர் சங்க செயலாளர் கர்ணன்,  விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன்,மாரப்பா,தர்மலிங்கம் கலந்து கொண்டனர்.