திருவள்ளூர், பிப் 10- பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (பிப் .10), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் க.திவ்யா தலைமையில் மாநில துணைத் தலைவர் தெ.தேவகி போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் க.வெண்ணிலா, மாநில நிர்வாகிகள் சீ.காந்திமதிநாதன், ஏ.மணி கண்டன், சுந்தர்ராஜன், செந்தில்குமார், அ.மணிசேகர், பிரதீப் ஹரேஷ், அ.சந்தானம் உள்ளிட்ட பலர் பேசினர். ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோ.இளங்கோவன் நிறைவுயாற்றினார். மாவட்ட பொருளாளர் பா.மணிகண்டன் நன்றி கூறினார். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.லெனின் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் துரை.மருதன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். போராட்டத்தை வாழ்த்தி சங்க நிர்வாகிகள் இ.இராஜாபாதர், எம்.தங்க ராஜ், வி. சீதாராமன், என்.சாரங்கன், எம்.தாமோதரன், எம்.ஆர்.திலகவதி, முத்து சுந்தரம், வே.குமார், எஸ்.பாபு, கோ. பூங்கொடி, எ.எஸ்.சண்முகம், தேவிகா, சே.டில்லிபாபு, சத்யா, சுமதி, பால கிருஷ்ணன், அசோக் குமார், ரமணி, பாரத் உள்ளிட்ட பலர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.