districts

திருத்தணி மலைக்கு செல்லும் ஆட்டோக்களுக்கு சுங்க கட்டணம் அமைச்சரிடம் ஓட்டுநர்கள் முறையீடு

சென்னை, மே 26 -

    திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் ஆட்டோக்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டுமென்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை வெள்ளியன்று (மே 26) சந்தித்து ஆட்டோ ஓட்டுநர்கள் வலி யுறுத்தினர்.

   கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோக்களுக்கு மட்டும் சுங்க வரி செலுத்துவதில் இருந்து அற நிலையத்துறை விலக்கு அளித்து இருந்தது. இந்த நிலையில்  கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து சுங்க கட்டணம் செலுத்த அறநிலையத்துறை இணை ஆணையர் விஜயா உத்தரவிட்டார்.

    இதன்படி மலை மீது பக்தர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் ஒவ்வொரு முறையும் ரூ30 சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் 250 ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

   எனவே, இந்த கட்டணம் வசூலிப்பதை கைவிட வலியுறுத்தி அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல்தலைவர் எஸ்.பால சுப்பிரமணியம், திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்க தலைவர் ஏ.கரிமுல்லா, பொதுச்செயலாளர் எம்.சந்திரசேகரன், ஏ.பிரியதர்ஷினி எம்.சி.,  ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.

   மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், கோரிக்கையை பரிசீலித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்று எஸ்.பாலசுப்பிரமணிம் தெரிவித்தார்.

;