மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின். 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குனர் டாக்டர்.சந்தியா பென்டா ரெட்டி, துணைவேந்தர் டாக்டர்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி மற்றும் பேராசிரியர்கள்,மாணவர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.