districts

img

வேலூர் நறுவீ மருத்துவமனைத் தலைவர் ஜி.வி. சம்பத் மகன் நிதின்-அபிராமி திருமணம்

வேலூர், செப்.6-  விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் பேரனும், வேலூர் நறுவீ மருத்துவமனை நிறுவனத் தலை வரும் ஜி.வி.சம்பத் - அனிதா சம்பத் தம்பதியின் மகனுமான நிதின் சம்பத்துக்கும், அடையார் ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர் கே.டி.வெங்க டேசன் -லலிதா தம்பதியின் மகள் அபி ராமிக்கும் நடைபெற்ற திருமண விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் ,கல்வியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர். சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மஹாலில் நடைபெற்ற திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர். ரகுபதி, பிடிஆர்.பழனி வேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆர்.காந்தி, சி.வி.கணேசன். கல்வியாளர்கள் ஹென்றி போர்ட் மருத்துவ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்காட், ராமசந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் வேந்தர் வெங்கடாச்ச லம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், கலசலிங்கம் பல்கலைக்கழகம் வேந்தர் ஸ்ரீதர், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இணை வேந்தர் ரவி பச்சமுத்து, அபேக்ஸ் லேபாராட்ரி வணங்காமுடி மற்றும் இரு திருமண வீட்டு உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்தவர்களை நறுவீ மருத்துவமனை நிறுவன தலைவர் ஜி. வி. சம்பத் அனிதா சம்பத் தம்பதியினர், அடையார் ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குனர்கள் கே.டி.வெங்கடேசன் -லலிதா தம்பதி கே.டி.சீனிவாச ராஜா-ஆனந்தி தம்பதி வரவேற்றனர்.