வேலூர்,ஜன.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட குழு சார்பில் மக்களவை தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம். மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜாபர் சாதிக் தலைமையில் திருப்பத்தூர் கோட்டை பகுதியில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி யிடம் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் நிதி வழங்கினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், திருப்பத்தூர் தாலுகா செயலாளர் எம்.காசி, ஜி.ரவி, சி.கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.